தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம், தாராபுரம் கோட்டம் சார்பில், சாலைப்பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.

தாராபுரம் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்துக்கு கோட்டத் தலைவர் வெங்கடசாமி தலைமை வகித்தார்.

இதில், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாகக் கணக்கிட்டு, அதற்குரிய பணப்பலன்களை வழங்க வேண்டும். பணிக்காலத்தில் உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு உரிய ஊதிய மாற்றம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த இயக்கத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், கோட்ட இணைச் செயலாளர் மணிமொழி, கோட்டச் செயலாளர் தில்லையப்பன், பொன்னரசு, செல்வகுமார், ஜெகதீஸ்வரன், செந்தில்குமார், அம்சராஜ், சிவராசு மற்றும் சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *