கடலூர், ஆகஸ்ட் 18: கடலூர் மாவட்டம், கங்கணாங்குப்பம் அரசு பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கூடுதல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் “கற்றல் கொண்டாட்டம்” திட்டத்தின் கீழ் டென்னிஸ் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டு பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கலந்து கொண்டு, டென்னிஸ் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டு பயிற்சிகளை இன்று (18.08.2026) தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனுடன், விளையாட்டு மற்றும் பிற தனித்திறன்களையும் வளர்க்கும் வகையில் “கற்றல் கொண்டாட்டம்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது ஆர்வம் மற்றும் திறமைக்கு ஏற்ப பல்வேறு விளையாட்டு மற்றும் இணைச் செயல்பாடுகளில் பங்கேற்று தங்களது திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

டென்னிஸ் மற்றும் பேட்மிட்டன் பயிற்சிகள் மூலம் மாணவர்களிடையே உடல் ஆரோக்கியம், விளையாட்டு ஆர்வம், ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் போட்டித் திறன் ஆகியவை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *