உடன்குடி ஆகஸ்ட் – 19
உடன்குடி TDTA மேல் நிலை பள்ளி இன் 75 ம் வருட பவள விழா
விற்கு முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு வருகின்ற 2026 செப்டம்பர் 5 ஆம் தேதி நமது பள்ளியின் 75 ஆண்டு நிறைவு விழாவான பவள விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது
அது சமயம் நமது கிறிஸ்தியா நகரம் TDTA மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் முன்னால் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். என பள்ளியின் தாளாளர் திரு. ஆமோஸ் ராஜா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கான்ஸ்டன் டைன் மற்றும் பள்ளி இன் ஆசிரியர்கள்,ஆசிரியைகள் ஆகியோர் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம் என தெரிவித்தனர்.
இவ்விழாவில் இப்பள்ளியில் 75 ஆண்டுகளில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று தற்போது பல நாடுகள் மாவட்டங்கள் என வாழ்ந்து வருகின்றனர் முன்னாள் மாணவர்கள் தற்போது தொழிலதிபர்களாகவும் அரசியல் பிரமுகர்களாகவும் கலெக்டர்களாகவும் டாக்டர்களாகவும், ஆசிரியர்களாகவும் ஆசிரியைகளாகவும் வக்கீல்களாகவும் இன்னும் பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது மிக்க மகிழ்ச்சி தருகின்றது.
இந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நடக்கும் 75 ஆம் ஆண்டு நிறைவு பவள விழாவிற்கு இவர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.