தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை வகித்து நடத்திய கம்பம் குறுவட்ட பாரதியார் தின குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026-2027 கூடலூர் என் எஸ் கே பி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த விழாவுக்கு கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் பள்ளிகளின் குழுமத் தலைவர் வி அச்சுநாகசுந்தர் தலைமை தாங்கினார்.

கூடலூர் என் எஸ் கே பி.மேல்நிலைப் பள்ளித் தாளாளர் பி.கே ரம்யா முன்னிலை வகித்தார் ஸ்ரீ சக்தி விநாயகர் பன்னாட்டு பள்ளி முதல்வர் ஆர் கருப்பசாமி என் எஸ் கே பி பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட் குமார் வாழ்த்தி பேசினார். ஸ்ரீ சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் எஸ்.ஆனந்தகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தடகளப் போட்டிகளை தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசி ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சி. குபேந்திரன் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு தடகளப் போட்டிகளைப் பற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளிகளின் இருபால் ஆசிரியர்கள் தமிழக வெற்றி கழக தேனி தென்மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன் உட்பட தமிழக வெற்றி கழக நகர நிர்வாகிகள் மாணவ மாணவிகள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *