தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் நரம்பியல் மற்றும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட சிறப்பு அறுவை சிகிச்சை.

நரம்பு மண்டலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் 3 நோயாளிகளுக்கு மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றும் இந்த அரியவகை கட்டிகள், மண்டையோட்டின் அடிப்புறம் வழியாக மூளையை நோக்கி வளரக்கூடிய ஆபத்து கொண்டவை. இந்தச் சிறப்பு கூட்டு அறுவை சிகிச்சையின் மூலம், நரம்பியல் நிபுணர்கள் மண்டையோட்டின் வழியாக மைக்ரோஸ்கோப் உதவியுடனும், காது மூக்கு தொண்டை நிபுணர்கள் மூக்கு வழியாக எண்டோஸ்கோப் கருவி மூலமாகவும் கட்டியை முழுமையாக அகற்றினர்.

3 நோயாளிக்கும் கட்டி அகற்றப்பட்ட பிறகு, மூளையையும் மூக்குப் பகுதியையும் பிரிக்கும் மண்டையோட்டின் முன்பகுதியை நரம்பியல் நிபுணர்கள் நேர்த்தியாகச் சீரமைத்தனர். மூளையைப் பாதுகாக்கவும், மூளைத் தண்டுவட நீர் கசிவைத் தடுத்து, மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் தடுத்து உள்ளனர். நரம்பியல் துறையின் மூத்த நிபுணர் டாக்டர் N.அருண்குமார், இணை நிபுணர் டாக்டர் V.ஸ்ரீ பிரியதர்ஷன், (ENT) பிரிவின் மூத்த நிபுணர் டாக்டர் ஐசக் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு வெற்றி கரமாக செய்தனர். மயக்கவியல் துறையின் டாக்டர் G.அரிமாணிக்கம் உறுதுணையாக இருந்தார் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் V.பிரவீன் உடனிருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *