திருவாரூர்., ஆக 22

கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான நியாய விலை கடைகளில் சர்வர் பிரச்சினை காரணமாக பி ஓ எஸ் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.

குறிப்பாக பொதுமக்களின் கைரேகைகளை பதிந்த பிறகே நியாய விலை கடையில் பொருட்களை வழங்க முடியும் என்ற சூழலில் பி ஓ எஸ் இயந்திரம் முறையாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு நியாய விலை கடை பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிஒஎஸ் இயந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் திருவாரூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான நியாய விலை கடை பணியாளர்கள் அவர்களது பி ஓ எஸ் இயந்திரத்துடன் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *