துறையூர் ஆக-22
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்-ன் (விருத்தாசலம் எம்எல்ஏ) உத்தரவின் படி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் ஆலோசனையின் படி,
துறையூர் தனியார் ஏசி ஹாலில் 22-08-2026அன்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ந் தேதி அன்று பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று துறையூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்குதல்,முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் அன்னதானம் வழங்குதல்,குட்டக்கரையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குதல், அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பிரட்டு,பழங்கள் வழங்குதல், துறையூர் சின்ன ஏரியை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து புதிதாக கிழக்கு ஒன்றிய செயலாளரக பொறுப்பேற்றிருக்கும் கிருஷ்ணசாமிக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் முருகேசன், தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இதில் மாவட்ட தொழிற்சங்கம் சொரத்தூர் ஆர் கே பி சிவக்குமார்(முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்), ஒன்றிய பிரதிநிதிகள் செந்தில், ரமேஷ், பச்சமலை நடராஜ், கிளைக் கழக நிர்வாகிகள் அசோக்குமார், வினோத், எஸ் விஜயகுமார்,வினோத் , ரெங்கநாதபுரம் சுப்பிரமணி, மேலகுன்னுப்பட்டி பழனிசாமி, நாகலாபுரம் சுப்பிரமணி, புளியம்பட்டி செந்தில், மனோகர்,செங்காட்டுப்பட்டி கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், துரைசாமி, கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜூ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *