அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா வாலாஜா நகரம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்தது அரியலூர் திருமானூர் செந்துறை ஆகிய ஒன்றியங்களில் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார் செந்துறை ஒன்றிய செயலாளர் அர்ஜுனன் அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் துரைசாமி மூத்த உறுப்பினர் சிற்றம்பலம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் சிறப்புரையாற்றினார் திருமனூர் ஒன்றிய செயலாளர் சாமிதுரை அனைவருக்கும் நன்றி கூறினார் ஆறுமுகம் அன்புமதி இயேசுராஜ் கலைமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்