சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் லயன்ஸ் சங்கம்,
தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் முருக்கங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் திருவாடுதுறை ஆதீன அம்பலவான தேசிகர் நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
முகாமை பேரூராட்சித் துணைத் தலைவர் சுந்தர .ஜெயபால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
சங்கத் தலைவர் லயன் சுரேஷ் தலைமை தாங்கினார்.சாசன தலைவர் லயன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் மோகன்,கண் சிகிச்சை முகாம் மாவட்ட தலைவர் ஞானசேகரன்,தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களின் கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் என 322 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து 27 நபர்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள். முன்னதாக இராஜசேகர் வரவேற்றார். நிறைவில் கார்த்திக் நன்றி கூறினார்.
.
முகாம் ஏற்பாடுகளை சங்க செயலாளர்கள் வெங்கடேசன்,ராஜேஷ், பொருளாளர் பாஸ்கரன் மற்றும் உறுப்பினர்கள் சரவணன், வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.