நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகலில் வண்டுவார்குழலி அம்மன் சமேத ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மாதம் ஒரு சனிக்கிழமை பெரிய புராணம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு பெரிய புராண சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி சிவனடியார் மாரியப்பன் கலந்து கொண்டு பெரியபுராணம் குறித்து பக்தி சொற்பொழிவு ஆற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார், கணக்கர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் குருநாதன், கோவில் அர்ச்சகர் சுந்தரகணபதி,வின் எஜுகேஷன் நிறுவனர் தமிழரசன் மற்றும் திருஞானசம்பந்தர் உழவாரப் பணிக்குழுவினர் செய்திருந்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.