மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 17-ந்தேதி நாரைக்கு முக்தி அருளிய திருவிளையாடலும், 18-ந்தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும், 19-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடலும், 20-ந் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், 21-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடைபெற்றது.
22-ந்தேதி வளையல் விற்ற திருவிளையாடலும் அன்று மாலை சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற் றது. நேற்று (23-ந்தேதி) நரியை பரியாக்கிய திரு விளையாடல் நடைபெற்றது. ஆவணி மூல திருவிழா வின் முத்தாய்ப்பாக 9-ம் நாளான இன்று மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. அதன்படி சிறப்பு அலங்காரமாக பிட்டுக்கு மண் சுமந்த திருக் கோலத்தில் சுந்தரேசுவரர் அளித்தார்.
முன்னதாக சுந்தரேஸ்வர ரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகள், கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பழைய சொக்கநாத சுவாமி கோவில் உள்பட பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்த ருளி பேச்சியம்மன் படித் துறை வழியாக புட்டுத் தோப்பு மண்டபத்திற்கு சென்றனர். அங்கு மதியம் 1.35 மணிக்கு மேல் 1.59 மணிக் குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், அப்போது பிட் டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உற்சவம், மண் சாற்று தல் லீலையும் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
இதில் திருப்பரங்குன்றம் முருகன், திருவாதவூர் மாணிக்கவாச கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். முன்ன தாக புட்டுத்தோப்புக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசு வரர் புறப்பாடை முன்னிட்டு இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. மாலை அவர்கள் கோவிலுக்கு திரும்பியதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள்.