மீலாதுநபி விழாவை முன்னிட்டு காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள அனைத்து கள், சாராயம் மற்றும் மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மதுபானம் பரிமாறும் உணவகங்கள் நாளை 26.08.2026 (புதன்கிழமை) அன்று மூடப்பட்டிருக்க வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட கலால்துறை துணை ஆணையர் எம்.பூஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விதிமீறல் கண்டறியப்பட்டால் புதுச்சேரி கலால் விதிகள் 1970 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்