காரைக்கால் இராயன்பாளையத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில், சமுதாய நலப்பணித்திட்ட தினம் மற்றும் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது கல்வி வழிகாட்டுதல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வினய் குமார் காட்கே சிறப்புரையாற்றினார்.

மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாலு, மாவட்ட ஆட்சியரின் செயலர் வித்யாதரன், கல்வித்துறை துணை இயக்குநர் ஜெயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயராணி, சிஎஸ்எஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் சிஎஸ்எஸ், என்எஸ்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 9385856800

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *