S.செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்
நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக, 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட மொத்தம் 384 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
திபெத் எல்லைக்கு அருகில் உள்ள போட்டே கோசி (Bhote Koshi) ஆற்றில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளமே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
நேபாள சுற்றுலா வாரியம் (NTB) வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவலின்படி, மாயமான 384 சுற்றுலாப் பயணிகளில் 291 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள், 93 பேர் நேபாள குடிமக்கள் ஆவர். வெளிநாட்டுப் பயணிகளில் 105 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.