கல்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெய்தல் கல்வி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா மிக விமர்சையாக நடைபெற்றது
இதில் நெய்தல் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜெயமாலினி தலைமை தாங்கினார் துணைத் தலைவர் இந்துமதி செயலாளர் கோபி பொருளாளர் ஐயப்பன் அமைப்பாளர் கே கருணாகரன் நந்தன் எல்ஐசி ஆலோசகர் இராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி திருமேனி விஜயசுந்தரம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களான நோட்டு புத்தகம் பேனா பென்சில் ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் இனிப்புகள் வழங்கினார் இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்