பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததை, பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பொட்டலூரணி மக்கள் கொண்டாடினர்.

சென்னை அருகே உள்ள பரந்தூரில், மத்திய அரசு பசுமை விமான நிலையம் என்ற பெயரில் புதிய விமான நிலையத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டது. அதற்காக அரசு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது. இந்த நிலையில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி அதனை எதிர்த்து பரந்தூர் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ந்து போராடினர். போராடும் மக்களை நேரடியாகச் சந்தித்த ஜோசப் விஜய் அவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்தை இரத்து செய்வோம் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இரத்து செய்வதாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் அறிவிப்பினை வெளியிட்டார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் இரத்துசெய்த முதலமைச்சரின் அறிவிப்பினைக் கேட்ட பொட்டலூரணி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், சுவரொட்டிகள் ஒட்டியும் வரவேற்றுக் கொண்டாடினர்.

இது குறித்து, பொட்டலூரணி கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஈ. சங்கர நாராயணன் கூறியதாகவது:

பரந்தூர் மக்களின் நியாமான கோரிக்கைகளைக் கேட்டும் அவர்களின் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், விமான நிலையத் திட்டத்தை இரத்து செய்து சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைப் பாராட்டுகிறோம்; அறிவிப்பினை வரவேற்கிறோம். அதேநேரத்தில், பல்வேறு இழப்புகளைச் சந்தித்து நீண்ட காலம் போராடிய பரந்தூர் மக்களை வாழ்த்துகிறோம்.

பரந்தூருக்கு வழங்கிய நீதியைப் போன்று, துர்நாற்றம் வீசிச் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவித்துவரும் பொட்டலூரணி பகுதியிலுள்ள மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூட வேண்டும்; 836 நாள்களாகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும். இதற்குத்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்;
அதற்கு ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான, அமைச்சர் பி. மதன்ராஜா அவர்கள் துணை நிற்கவேண்டும் என்றார்.

ஈ. சங்கரநாராயணன்,
ஒருங்கிணைப்பாளர்
கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக்குழு,
பொட்டலூரணி
9965868114

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *