கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன்
இணைந்து நடத்திய சாருபாலா ஜூவல்லர்ஸ் குடும்பத்தினர் நிதி உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலையில் நடந்தது.

முகாமை சங்கத் தலைவர் லயன் எஸ்.ராகவன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

மாவட்டத் தலைவர் லயன் ஞானசேகரன்,மண்டலத் தலைவர் லயன் மோகன்,
வட்டாரத் தலைவர் லயன் பாலசுப்பிரமணியன்,செயலாளர்கள் லயன் மாதவன்,
செயலாளர் லயன் நடராஜன்பொருளாளர் லயன் சிவக்குமார் மக்கள் தொடர்பாளர் லயன் வெங்கட்ராமன்,மற்றும் முன்னாள் தலைவர்கள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களின் கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் என 397 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 106 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அழைத்து செல்லப்பட்டனர்.

அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும் 192 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

முகாம் ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *