கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், வீதா லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதை நடவு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனார்த்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துளசிதரன், செந்தில், பெருமாள், மாரிமுத்து, ஆனந்தராஜ் உள்ளிட்ட வீதா லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து, நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடப்பட்டன.
மேலும், பசுமை வளத்தை அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை காக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்