புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் மீன்வளத்துறை சார்பில் PMMSY திட்டத்தின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு வசதி தொடக்க விழா மற்றும் நீலப் பொருளாதாரம் சார்ந்த கூட்டுறவு முறை கடல்பாசி வளர்ப்புக்கான பன்முகத்திறன் மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதல்வர் ந.ரங்கசாமி தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
S.செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர், காரைக்கால்