தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்.
குண்டடம்,
பள்ளி மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக பரதநாட்டியம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புறக் கலைகள் உள்ளிட்ட 25 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு இப்போட்டிகள் “இளையோர் திறன்” என்ற பெயரில் நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப போட்டிகள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.
அதன்படி, குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், ஒவ்வொரு குறுவளமைய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று (01.09.2026) குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
கலைத்திருவிழாவை குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி திலகவதி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர் திரு. தர்மராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.