மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் ஊராட்சியில், மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயனாளிகள் முகாம் நாளை மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆர்.ஏ.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு வாகனத்தை மதுராந்தகம் நகராட்சி ஆணையர் சுகேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், அவற்றின் பயன்கள் மற்றும் தகுதியுடைய பயனாளிகள் பயன்பெறும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பகத்தின் உதவி அலுவலர்கள் வீரமணி, ஜெயகணேஷ், இந்தியன் வங்கியின் நிதிசார் ஆலோசகர் பக்தவச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனா, துணை வட்டார அலுவலர் சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் செல்வராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு வாகனம் தொடர்ந்து இரண்டு நாட்கள் மதுராந்தகம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சென்று, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *