பக்கீல் ஓடை பணிகளை கலெக்டர் விஷி மகாஜன் ஆணையர் பிரியங்கா ஆய்வு.
தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் உள்ள பக்கீல் ஓடை விரிவாக்க பணிகளும் நடைபெற்று வருகிறது அதுபோல தூர்வாரும் பணிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷி மகாஜன். ஆணையர் பிரியங்கா ஆகியோர் பக்கீல் ஓடை விரிவாக்க பணிகளை நேரில் பார்வையிட்டனர் அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையர் பிரியங்கா விடம் பணிகள் தொடர்பான விபரங்களை கேட்ட றிந்தார். அதுபோல பக்கீல் ஓடையில் தூர்வாரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் விசு மகாஜன் ஆணையர் பிரியங்கா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்கள் நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.