உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமராவதி அணையிலிருந்து அமராவதி ஆற்றில் தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், உத்தரவை முழுமையாக நிறைவேற்றாமல் தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை வஞ்சிப்பதாகக் கூறி ஆளும் தவெக அரசைக் கண்டித்தும், கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட கழகச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில், தாராபுரம்–கரூர் மாவட்ட எல்லைப் பகுதியான ஒத்தமாந்துறை பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அமராவதி ஆற்றில் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தினமும் 3,000 கன அடி தண்ணீரை அமராவதி அணையிலிருந்து திறந்து விட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தி, அமராவதி ஆற்றை நம்பியுள்ள தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *