திரளாக பெண்கள் பங்கேற்று பூசைகளில் ஆன்மீகத்தில் திளைத்து பக்தி பரவசம்
கோவை வைசியாள் வீதியில் அமைந்துள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில், லட்சம் கௌரி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தின் தலைவர் சுரேஷ் பாபு முன்னிலிலே, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பிரக்ஞானந்த சரவஸ்வதி பாலசுவாமிகள் தலைமையில் நடந்த இந்த சிறப்பு பூசையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக பங்கேற்று கெளரி அம்மனுக்கு பூசைகள் செய்து வழிபட்டிருக்கின்றனர்.
சங்கல்பம், கெளரி அஸ்டோத்திரம், லக்ஷ்மி அஸ்டோத்திரம், லலிதா சகஸ்ர நாமாவளி என 1,00,008 கெளரி அம்மனுக்கு பூசைகள் செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மந்திரங்கள் சொல்லச் சொல்ல பெண்களும் பின் தொடர்ந்து மந்திரங்கள் சொல்லி கௌரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். உலக மக்கள் நலன், உலக நாடுகளுடன் அமைதி , விவசாயம் மற்றும் தொழில் செழிக்க, வருடத்தின் 365 நாட்களும் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என ஒவ்வொரு பெண்களும் 366 கௌரி அம்மன் சிலைகள் செய்து வழிபட்டனர்.
ஒரு கௌரி அம்மனுக்கு பூஜைகள் செய்யும் பொழுது கிடைக்கும் பலனை காட்டிலும், 366 கௌரி அம்மனுக்கு ஒரே நேரத்தில் பூஜை ஒவ்வொரு பெண்களும் சேர்ந்து மொத்தமாக ஒரு லட்சத்து எட்டு கௌரி அம்மன் பூஜை செய்தல் ஆன்மீக ரீதியில் பெரும் நன்மை பயக்கம் என போதையில் பங்கேற்ற பெரியவர்கள், பெண்கள் தெரிவித்திருக்கின்றனர்.
பூஜைகளை தொடர்ந்து அனைவருக்கும் கௌரி அம்மன் பிரசாதம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் வருடம் தோறும் ஒவ்வொரு சிறப்பு நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாகவும், ஒரு லட்சத்து எட்டு கௌரி அம்மன் பூஜை சிறப்பு வாய்ந்த பூஜை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.