தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் மேலாண்மை இயக்குனர் ம. கோவிந்த ராவ் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தேனி மாவட்டத்தில் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்திடும் வகையில் அனைத்து துறை அலுவலகர்களுடான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது

குறிப்பாக ஊராட்சி பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்திட வேண்டும் மேலும் ஊராட்சி பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாக நிறைவு செய்ய வேண்டும்


அதேபோன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகளை வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக நிறைவு செய்ய வேண்டும். இதேபோல் மாவட்டத்தில் மற்ற துறைகள் சார்பில் தமிழ்நாடு அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குனர்

கோவிந்தராவ் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் ஆகியோ ர் தெரிவித்தனர் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை துஷார் ஸ்ரீ ஹரி ஷிண்டே மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது இராமகிருஷ்ணன் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் வீராச்சாமி தேனி மண்டல மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் நகராட்சி ஆணையாளர்கள் பெரியகுளம் தமிஹா சுல்தானா தேனி செல்வி எஸ் பார்கவி போடி முஸ்தபா சின்னமனூர் ரா.து. கோபிநாத் கம்பம் உமாசங்கர் கூடலூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *