கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘ஆரா’ விழா நடைபெற்றது.விழாவிற்கு மாஸ் கல்விக்குழும தாளாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மாலினி விஜயகுமார் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவிடைமருதூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கே.அழகேசன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

கும்பகோணம், நட்புறவு நலச்சங்க தலைவர் ஏ.எஸ். மூர்த்தி, மற்றும்
ஆர். சஞ்சீவிகுமார், ஒயிட்ஸ்காலர் நிறுவனர் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.ரத்தினம் குளோபல் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பயோடெக் ஸ்கூல் ஆப் அப்ளைடு சயின்ஸ் துணைப் பேராசிரியர் டாக்டர் எஸ். ராமு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு பயனுள்ள கருத்துகளை எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ–மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *