தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெறுவதற்கு கோவை காந்திபுரம் டாக்டர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் சுகுணா ரிப் வி பள்ளியின் முதல்வரும் இயக்குனருமான ஆண்டனி ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் பணியை வெறும் கல்வி கற்பிக்கும் பணியாக மட்டுமின்றி, மாணவர்களின் அறிவு, ஒழுக்கம், திறமை மற்றும் தனித்திறன்களை வளர்க்கும் பொறுப்பாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆண்டனி ராஜின் கல்விச் சேவையைப் பாராட்டி தமிழக அரசு இந்த விருதை வழங்குகிறது.

சுகுணா ரிப் வி பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குனராக பொறுப்பு வகித்து வரும் ஆண்டனி ராஜ், பள்ளியின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதுடன், மாணவர்களின் கல்வி, விளையாட்டு, கலை, தனித்திறன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவர்களை ஊக்குவித்து வருவதூ குறிப்பிடதக்கது…

இந்நிலையில் விருது பெறும் ஆண்டனி ராஜுவிற்கு சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி,தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி ,இயக்குனர்கள் அனீஷ்குமார்,சாந்தினி அனீஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *