தேனி மாவட்டம்


கம்பம் யாதவர் மடாலயத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கம்பராயப்பெருமாள் கோவில் செயல்அலுவலர் நதியா தலைமையில் யாதவர் சமுதாய நிர்வாகிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தின்படி வெள்ளிக்கிழமை காலை வேணுகோபாலகிருஷ்ணன் கோவிலில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து கே.கே.பட்டி சாலை, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, காளியம்மன் கோவில், எல்.எப்.ரோடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

பின்னர் வேணுகோபால கிருஷ்ணன் மூலவர் சுவாமிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மதியம் 3 மணியளவில் யாதவ சமுதாய நாட்டாண்மை குணசீலனை யாதவர் சமுதாய தலைவர் சேகரன் தலைமையில் சமுதாய நிர்வாகிகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வேணுகோபால கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்து வந்தனர் .பின்னர் யாதவ சமுதாய பெண்கள் பொங்கல் பானையுடன் கம்பராயப்பெருமாளுக்கு சென்று பொங்கல் வைத்தனர்.

பின்னர் கம்பராயப்பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கம்பராயப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆஞ்சனேயர்,லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட உற்சவர்கள் மற்றும் கருடாழ்வார் வாகனங்களை கோவில் மேளதாளத்துடன் டிராக்டரில் ஊர்வலமாக வேணுகோபால கிருஷ்ணன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் இரவு பட்டி மன்ற நிகழ்ச்சியும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மறுநாள் சனிக்கிழமை கம்பராயப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆஞ்சனேயர்,லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட உற்சவர்களுக்கு திருமஞ்சனம் பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து மாலை உறியடிப்பவர் சிவனேசனை மேளதாளம் முழங்க சமுதாய நிர்வாகிகள் அழைத்து வந்தனர். பின்னர் சமுதாய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், நிர்வாக கமிட்டி, விழா கமிட்டி நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட கருடாழ்வார் வாகனத்தித்தில் கம்பராயப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆஞ்சனேயர்,லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட உற்சவர்களின் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது .கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் இருந்து கம்பம் நகரின் முக்கிய வீதிகளான போக்குவரத்து சிக்கனல், காந்தி சிலை, தியாகி வெங்காடச்சலம் தெரு, பார்க் ரோடு, வேலப்பர் கோவில் வழியாக உலா வந்தார். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் வேலப்பர் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதற்காக 30 அடி உயரமுள்ள வழுக்கு மரம் வைக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு வழுக்குமரம் ஏறினர். பின்னர் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கம்பராயப்பெருமாள் கோவிலில் வீதி உலா நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் கம்பராயப்பெருமாள் கோவிலில் கருடாழ்வார் வாகனம் மற்றும் கம்பராயப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆஞ்சனேயர்,லட்சுமி நாராயண பெருமாள் சாமியை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நாட்டாண்மை குணசீலன், யாதவ சமுதாய தலைவர் சேகரன், செயலாளர் குணசீலன்,வழுக்கு மரம் ஏறி வெற்றி பெற்ற ஹர்சன், உறி அடித்த சிவனேசன், உறி இழுத்த பொன்னுச்சாமி பிள்ளைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து யாதவ சமுதாய பொருளாளர்கள் சந்தனம், சத்யநாராயணன்,செயற்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், குருசாமி, கண்ணன், சரவணன், இளையபெருமாள், கருப்பசாமி,கண்ணன், குமரேசன், ராகுல், விழா கமிட்டி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், அய்யாகண்ணு, கணேசன், செந்தில்குமார், முத்துராஜ், கார்த்திக், சிவக்குமார் ஆகியோர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலை மையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *