நாகப்பட்டினம்,
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நாகை மாவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் பிரிவில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 2-ம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் குமார், உதவி தலைமை ஆசிரியர் சுகுமாரன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பானந்தம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் உடற்கல்வி ஆசிரியர்கள் சௌரிராஜன், லெனின் ஆகியோரையும் பாராட்டினர்.