தென்காசி சரகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள 7 வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் அவர்களுக்கும் அழகப்பபுரம் ஊ. ஒ. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குத்தாலிங்கம் அவர்களுக்கும் சி.எம். எஸ். நடுநிலைப்பள்ளி தென்காசியில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.


ஆசிரியர் சேக் முகமது ரபீக் வரவேற்புரை ஆற்றினார்.ஓய்வு பெற்ற ஆசிரியர் சரவணன் விருது பெற்றோர்களை வாழ்த்திப் பேசினார். மேலும் ஆசிரியர் சராபின் வாழ்த்திப் பேசினார். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் பேசும்போது ஆசிரியர் பணி என்பது ஒரு மகத்தான பணியாகும். ஆசிரியர்கள் தங்கள் திறமைகளை தங்கள் பள்ளியோடு நிறுத்தி விடாமல் அதனை அனைத்து குழந்தைகளும் பயன்படு ம் வகையில் வெளிப்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் திறமைகளை கணக்கிட்டே விருதுகள் வழங்கப்படுகிறது. இவர்களைப் போல மற்ற ஆசிரியர்களும் விருது பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடையும் புத்தகங்களும் வழங்கி கௌரவிக்கப்படனர். விருது பெற்ற ஆசிரியர்கள் கற்பகம் மற்றும் குத்தாலிங்கம் இருவரும் ஏற்புறை வழங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜதுரை நன்றி கூறினார் விழாவிற்கான ஏற்பாடுகளை தென்காசி சரக அனைத்து தலைமை ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *