தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420

தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பானுமதி கருணாகரன் அறிவிப்பு .

தாராபுரம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம்தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் இதன்படி தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், அதிமுக மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளருமான பானுமதி கருணாகரன்62, இவர் 05.07 .1964,ல் பிறந்துள்ளார் ,


அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பானுமதி கருணாகரன் பி ஏ இளங்கலை சமூக அறிவியல் கல்வி முடித்துள்ளார், 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு அதிமுக காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவி வகித்தார், 2006 முதல் 2011 வரை ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும், ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல ஆலோசனைகுழு உறுப்பினராகவும், திருப்பூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும் ,மேலும் பல பொதுநல குழுக்களில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்


இவருக்கு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் துணை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கருணாகரன் 65 என்ற கணவரும் ,ரஞ்சித் குமார் 40, எம் எஸ் சி -யுகே, என்பவரும் ராம்குமார் 37,பி ஏ என்ற பட்டப் படிப்பு முடித்த இரண்டு மகன்களும் உள்ளனர். தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் பானுமதி கருணாகரன் தாராபுரத்தை அடுத்துள்ள வீராச்சிமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர், இந்து ,குடும்பர் பிரிவை சார்ந்த இவர்கள் குடும்பத்தினர் விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *