தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதியான மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால் சேதம் அடைந்து இருப்பதாகவும் வடிகால் சரிவர செல்லவில்லை என மேயர் ஜெகனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து உடனடியாக மாநகராட்சி மேயர் ஜெகன் அப்பகுதிக்கு சென்று பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டு அறிந்தார்

அதுபோல கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால் பகுதிகளையும் பார்வையிட்டார் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக கழிவுநீர் செல்லக்கூடிய வடிகாலில் உள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் . அதுபோல சேதம் அடைந்து உள்ள கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால்களை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் உத்தரவிட்டார்

இதனை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக பார்வையிட்டு பணிகளை செய்ய உத்தரவிட்ட மேயர் ஜெகனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன். திமுக பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் மற்றும் திமுகவினர் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *