தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
.
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி (101) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வேங்கிபாளையம் பகுதியில் திருப்பூர்–தாராபுரம் சாலை மற்றும் தாராபுரம்–கோவை சாலை ஆகிய முக்கிய சாலைப் பகுதிகளின் எல்லையில் தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கண்காணிப்பு பணிகளில், தேர்தல் விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், தொகுதி முழுவதும் முக்கிய சாலைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு தற்காலிக சோதனைச்சாவடிகள் மூலம் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பகல் மற்றும் இரவு நேரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.