விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்
இதனால் வருகின்ற திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பொதுமக்களிடம் பண வசூல் செய்து தங்களுக்கு ஏற்றார்போர் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் மேம்பாலம் பகுதியை சேர்ந்த குட்டிஸ் சிலர் விநாயகர் சிலை வைக்க பொதுமக்களிடம் வசூல் செய்தனர் அப்போது சிலர் என்னிடம் பணம் இல்லை google payவில் தான் பணம் உள்ளது எனக் கூற எங்களிடம் qr கோடு இருக்கு அதில் பணம் அனுப்புங்கள் என்று க்யூட்டாக பணம் வசூல் செய்த சம்பவம் அரங்கேறியது.
மேலும் குட்டிஸ் க்யூ ஆர் கோடில் க்யூட்டாக பணம் வசூல் செய்த சம்பவம் டிஜிட்டல் பணம் வர்த்தனை எவ்வளவு முன்னேறி இருப்பது என்பதும் அதேபோல இது குறித்து சிறுவர்களும் தெரிந்து வைத்துள்ளதும் இந்த சம்பவம் உணர்த்துவது குறிப்பிடத்தக்கது….