வேப்பூர் திருச்சிலுவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா தேர் பவனி மற்றும் சிறுவர் சிறுமியருக்கு உறுதி பூசுதல் நிகழ்ச்சி பிஷப் பங்கேற்பு:-

ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் திருச்சிவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 5-9-2026 சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று 14 ஆம் தேதி பெருவிழா தேர்பவனி மற்றும் 29 சிறுவர் சிறுமியர்களுக்கு உறுதிப்பூசுதல் வழங்கும் நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முதல் நாள் வேப்பூர் புனித சூசையப்பர் பள்ளி தாளாளர் தந்தை ஏ.ஆர். அந்தோணிசாமி பங்குத்தந்தை மார்ட்டீன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட திருச்சிலுவை கொடியை ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலி பூஜை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தினமும் மாலை பல்வேறு அன்பியங்கள் சார்பில் பல்வேறு அருட்தந்தையர்களால் சிறப்பு பாடல் திருப்பதி பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் விசாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துகொண்டு திருச்சிலுவை நாதரை தண்டனிட்டு சென்றனர்.

நேற்று முன்தினம் 13ஆம் தேதி பங்குத்தந்தை மார்ட்டீன் தலைமையில் சிப்காட் பங்குத்தந்தை சார்லஸ் ஏசுதாஸ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி பூஜையை நிகழ்த்தி வண்ண மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் ஆடம்பர தேர் பவணியை துவக்கி வைத்தார். அன்னையின் ஆடம்பர தேர் பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்து அடைந்தது. விழா முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வேலூர் மறை மாவட்ட பிஷப் அம்ரோஸ் பிச்சைமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 29 சிறுவர் சிறுமியர்களுக்கு உறுதிப்பூசுதல் வழங்கி ஆசிர்வாதித்து அர்ச்சித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருச்சிலுவைநாதர் மற்றும் அன்னைக்கு தண்டனிட்டு சென்றனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை மார்ட்டீன், அந்தோணிசாமி ஜான் எட்வின் குமார், பங்கு மண்ணின் மைந்தர்கள், அன்பிய பொறுப்பாளர்கள் இளைஞர்கள் பங்கு மக்கள் உள்பட பலர் செய்திருந்தனர். விழா முடிவில் பங்கு தந்தை மார்ட்டீன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *