நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பரமத்தி வேலூர் பேரூர் திமுக செயலாளர் முருகன் தலைமை வகித்தார்..

நாமக்கல் மேற்கு மாவட்ட கழக அணி துணை அமைப்பாளர் கண்ணன்,நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், மாவட்ட வழக்கறிஞர்கள் அணி துணை அமைப்பாளர்கள் , வக்கீல் பாலகிருஷ்ணன், பரமத்திவேலூர் பேரூர் கழக அவை தலைவர் மதியழகன் பேரூர் துணைச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரமத்தி வேலூரில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு பேரூர் செயலாளர் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் .

அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.. நிகழ்ச்சியில் மாவட்ட ,ஒன்றிய ,பேரூர் கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *