கோவை பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரி சார்பில், “எல்லைகளைத் தாண்டிய பராமரிப்பு – திருநங்கையரின் முழுமையான சுகாதாரப் பராமரிப்பு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது..
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் ஜெயதீபா அனைவரையும் வரவேற்றார் விழாவில் சிறப்பு விருந்தினராக,சகோதரி அறக்கட்டளையின் நிறுவனரும் திருநங்கைகள் உரிமைகள் ஆர்வலரும், கலைஞரும், , எழுத்தாளரும், தமிழ்நாட்டின் தொழில்முனைவருமான கல்கி சுப்ரமணியம் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார்..
விழாவில் கவுரவ விருந்தினராக பி.எஸ்.ஜி.கல்லூரி இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டார் ஒரு நாள் நடைபெறும் இம்மாநாட்டில், திருநங்கையருக்கான பாலின மாற்றம் தொடர்பான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பராமரிப்பு, மனநலம், சட்ட உரிமைகள், சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் கலந்துரையாடினர்..
திருநங்கையருக்கு மரியாதை, சமத்துவம் மற்றும் மனிதநேயத்துடன் கூடிய சுகாதார சேவையை வழங்குவதற்கான அறிவையும் திறனையும் செவிலியர்களிடம் மேம்படுத்துவதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
மாநாட்டில் செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.. .