கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையில் கரூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டானாவில் உள்ள அறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மார்பளவு வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இநிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் அன்பு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் அலெக்ஸ், பகுத்தறிவுவாளர் கழக செயலாளர் பொம்மன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் விடுதலை, விடுதலை வாசகர் வட்ட தலைவர் கண்ணதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.