கரூர் செய்தியாளர் மரியான் பாபு



சென்னையில் நிறைவு பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் கரூர் பரணி வித்யாலயா 11 தங்கம்,7 வெள்ளி, 15 வெண்கலம் வென்று மொத்தம் 99 புள்ளிகளுடன் தொடர்ந்து 14வது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை 14வது முறையாக வென்று ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாத கடைசி வாரத்தில் நடைபெறும் தேசிய போட்டிகளில் பங்கு பெற தேர்வாகி,கரூர் பரணி வித்யாலயா பள்ளி புதிய வரலாறு படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியின் அக்ஷயா, தன்யா,ரோஸ்னாஸ்ரீ, தான்யா,லிதன்யா, கனிஷ்கா,சின்மயா, பிரணவ் கார்த்திக், மோகித்,திரிதேவ் கார்த்திக்,தரணிஷ் ஆகியோர் தங்கப்பதக்கமும், சுதிக்ஷா,யுகா, அனன்யா, கமலேஷ் குமார், அபினவ்வர்ஷன், ஸ்ரீகைலாஷ், சச்சின் பாபு வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர்.


அண்மையில் கொங்கு சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில ஜூடோ போட்டிகளிலும் பரணி வித்யாலயா 42தங்கப்பதக்கத்தையும்,15 வெள்ளி பதக்கத்தையும்,18 வெண்கல பதக்கத்தையும் வென்று ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்று மொத்தம் 75 பதக்கங்களுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து 14வது முறையாக தென்னிந்திய ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர்.C.ராமசுப்பிரமணியன், முதல்வர் S.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா, பரணி ஜூடோ பயிற்சியாளர்கள், துரை,முத்துலட்சுமி, கார்த்திகேயன், விளையாட்டு வீரர்களை பள்ளியின் தாளாளரும் மாவட்ட ஜூடோ சேர்மனும் ஆகிய S.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் ஆகியோரை பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


மேலும் மாநில ஜூடோ சங்கத்தலைவர் ஜிண்டால்,மாநில ஜூடோ சங்க துணைத்தலைவர் முனைவர் C.ராமசுப்பிரமணியன்,முதன்மை மாநில செயல் அலுவலர் விஜய் மோகன், மாநில செயலாளர் முரளி ஆகியோர் தொடர்ந்து 14வது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று அபார சாதனை படைத்துள்ள கரூர் பரணி வித்யாலயா பள்ளியை பாராட்டி வாழ்த்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *