தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றியம் நாகவேடு பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் அன்னதானமும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் S.G.C. பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருமான P. சுந்தராம்பாள் பெருமாள் கலந்து கொண்டு, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதிகள் தே. தனசேகரன், C.G. சண்முகம், K. சுரேஷ், J. தசரதன், ஒன்றிய கவுன்சிலர் K. முருகேசன், முன்னாள் கவுன்சிலர் ராஜசேகர், வழக்கறிஞர்கள் Y. பாபு, குமரகுரு, இளைஞர் அணி அமைப்பாளர் J. மணிகண்ட கருணாநிதி, மாணவர் அணி அமைப்பாளர் தினகரன், மேலாந்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கிளை நிர்வாகிகள் துளசிராமன், பாளையத்தான், இஷ்டலிங்கம், பார்த்தீபன், மணி, மணிகண்டன், சுந்தரம் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *