நெமிலி, செப்.15–
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வழக்கறிஞர் E.வெங்கடேசன் BA.BL. தலைமையில், நெமிலி பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலையை நோக்கி சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்து தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நெமிலி தெற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் தீனதயாளன், தொ.மு.ச. பேரவை காஞ்சி மண்டல பொருளாளர் முரளி, மாவட்ட பிரதிநிதி KB.சம்பத், சயனபுரம் எல்லப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் P.ராம்கி, நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முரளி முகேஷ், நெமிலி தெற்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ராஜராஜன், வே.செல்வேந்திரன், நெமிலி தெற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஜெகதீசன், தகவல் தொழில்நுட்ப அணி கிளைக்கழக செயலாளர்கள் எம்.ஆர்.இளங்கோவன், த.உதயகுமார், ஆனந்தன், சுப்பிரமணி, குப்பன், ஜெகதீசன், சிதம்பரம், பிச்சை, அசோக் ராஜேந்திரன், ரவி, முருகன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.