ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் 5ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் நகர்ப்புற மக்கள் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.ஏழுமலை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் திரு.சுரேஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மணவாள நகர் கிளை தலைவர் திரு. ரமேஷ் மற்றும் மணவாள நகர் கிளை செயலாளர் திரு. சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அரவிந்தன், தேசிய பொதுச் செயலாளர் நந்தகுமார், தேசிய துணைத் தலைவர் செல்வகுமார், தேசிய கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட தேசிய, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா பக்தி மற்றும் சிறப்புடன் நடைபெற்றதுடன், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பங்கேற்பால் விழா சிறப்பானதாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *