தஞ்சாவூர், செப்- 16. குடியிருக்க மனை கோரியும், குடிமனை பட்டா வழங்கக்கோரியும், ஏற்கனவே வழங்கிய பட்டாவை போக்குவரத்து செய்துதரக்கோரியும், கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கக்கோரியும் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க பூதலூர் தெற்கு, வடக்கு ஒன்றியக்குழுக்கள் சார்பில் பூதலூர் சேவு கடையிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று பூதலூர் வட்டாட்சியரிடம் 250 நபர்கள் 170 மனுக்களை அளித்தனர்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் இரா.இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் கோ.பாஸ்கர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.காந்தி, ஒன்றிய செயலாளர்கள் து.ஸ்ரீதர், இரா.முகில், நிர்வாகிகள் எம்.சம்சுதீன், எம்.அய்யாராசு, வீ.ராமமூர்த்தி, கே.சந்திரசேகரன், என்.முத்துலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர். மனுக்களை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறை வட்டாட்சியர் உள்ளிட்ட அலவலர்கள் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *