தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி ஆடிட்டோரியத்தில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தின் உறுப்பினரும் தமிழ்த் துறை உதவி பேராசிரியர் முனைவர் கே. சுதா அனைவரையும் வரவேற்று பேசும் போது கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கல்லூரியின் மூலமாக பெறவேண்டிய அனைத்து வகையான கல்வி உதவித்தொகையும் மாணவிகளுக்கு சரியான முறையில் கல்லூரி நிர்வாகம்பெற்று தருகிறது

என்றார் இந்த நிகழ்ச்சியில் 350 க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளின் கல்வி நிலை மற்றும் பிற வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். கல்லூரி பேராசிரியர்கள் பெற்றோர்களின் கேள்விக்கு சிறப்பான முறையிலும் நன்பகத் தன்மையோடும் விரிவாக விளக்கமாக பதிலளித்தனர் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தின் உறுப்பினரும் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியை டி. ஜெயா நன்றி கூறினார் இந்த நிகழ்ச்சிகயை கல்லூரி பெற்றோர் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டத்தின் உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *