தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

.

தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுகற் செயலாளர் இல. பத்மநாபன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை வரவேற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தனார் ஜனநாயக பேரவை, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

களப்பணி குறித்து ஆலோசனை

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வழக்கறிஞர் சுகன்யாவை வெற்றி பெறச் செய்வதற்கான தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர்களைற் நேரில் சந்தித்து, அரசின் திட்டங்கள் மற்றும் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைப்பது, வீடு வீடாகச் செத்து வாக்கு சேகரிப்பது, இளைஞர்கள் மற்றும் பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு களப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இலக்கு

கூட்டத்தில் பேசிய திமுக மற்றும் கூட்டணிக் கட்சிற் நிர்வாகிகள், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சுற்றி நிலவும் அரசியல் விவாதங்கள் குறித்தும் கூட்டத்தில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. நடிகர் விஜயின் பிரபலத்தையும் சமூக வலைதளங்களில் வெளியாகும் ‘ரீல்ஸ்’ பதிவுகளையும் மட்டுமே மையமாகக் கொண்டு அரசியல் செய்யப்படுவதாக தாங்கள் கருதுவதாகக் கூறிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், இந்த இடைத்தேர்தல் மூலம் அதற்கு அரசியல் ரீதியான பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இளைஞர்களை சமூக வலைதள ஈர்ப்புகளால் திசைதிருப்பாமல், தொகுதியின் அடிப்படைத் தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திமுக வேட்பாளர் சுகன்யாவின் வெற்றிக்காக அனைத்து கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *