நாகப்பட்டினம்
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவில் டேக்வாண்டோ போட்டியில் நாகை மாவட்டம் திருமருகல் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவன் கே.சபரீஷ் கலந்து கொண்டு 3-ம் இடம் பெற்றார்.
அந்த மாணவனுக்கு பள்ளியில் தலைமை ஆசிரியர் அமுதா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார் இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.