தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி.!

தாராபுரம்,

தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்-2026 முன்னிட்டு, பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் இன்று (19.09.2026) நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர். மனிஷ் நாரணவரே, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியின் மூலம், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. வாணிஈஸ்வரி மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் திருமதி. மதுரா ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *