தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.