தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் Exploring chartered accountancy as a career path என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் விரிவுரை கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது
மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் chartered accountant தொழிலின் சிறப்புகள் கல்வித் தகுதிகள் தொழில் வாய்ப்புகள் பணிப் பொறுப்புகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தேனி பட்டய கணக்காளர் ரானா ஜெகதீஷ் பங்கேற்று பேசும்போது CA படிப்பிற்கான தகுதிகள் தேர்வு நடைமுறைகள் தொழில் வாய்ப்புகள் மற்றும் கணக்கியல் தணிக்கை வரிவிதிப்பு உறுதிப்படுத்தல் ஆலோசனை மற்றும் இணைக்கப்பாடு போன்ற பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக புரியுமாறு விளக்கிப் பேசினார்
இந்த நிகழ்ச்சி கல்லூரி நிறுவன செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது மேலாண்மை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்
இந்த நிகழ்ச்சி மூலம் மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் தொழில் குறித்த தெளிவான புரிதலையும் எதிர்கால தொழில் இவக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான வழங்கும் வகையில் பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் நெகழ்ச்சியுடன் கூறினார்கள்.