தமிழகத்தை சேர்ந்த ரொபினர் நேசராஜா – கொலஸ்ரிக்கா ஆகிய இத்தாலி வாழ் தம்பதியினரின் 8 வயது மகன் ரோய்ன்டன் நேசராஜா.

இத்தாலி நாட்டில் வசித்து வரும் ரோய்டன் உலகின் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

உலக வரைபடத்தில் 197 நாடுகளின் அமைவிடங்களை சரியாகக் காட்டியதுடன், ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொடியை அடையாளம் கண்டு, அதன் பெயர் மற்றும் தலைநகரத்தையும் துல்லியமாகக் கூறியுள்ளார்.

இச்சாதனைக்காக இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சோழன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தி இன்டர்நேஷனல் அச்சீவ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் மாணவர் ரோய்ன்டன் நேசராஜாவின் பெயர் பதிவு செய்யப்பட்டது..

இந்நிலையில் ,இத்தாலியின் பலெர்மோ நகர மேயர் ரொபெர்டோ லகாலா மற்றும் நகர துணைத் தலைவர் பினோ மேன்கியூசோ மாணவனின் பள்ளி தலைமை ஆசிரியர் மரியா புராபாடோ மற்றும் பலெர்மோ நகர தமிழ் மக்கள் பிரதிநிதி ரமணி தியாகராஜா ஆகியோர் தமிழக மாணவனின் அரிய சாதனை முயற்சியை பாராட்டி கவுரவித்துள்ளனர்..

தொடர்ந்து இத்தாலி நாட்டின் பலெர்மோ நகர நிர்வாகம் இத்தாலி வாழ் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் உலகின் 197 நாடுகளின் புவியியல் தகவல்களை துல்லியமாக அடையாளம் காட்டியதுடன், அவரது புவியியல் அறிவை பாராட்டி விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *